Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான தகவலை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (18:37 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகையும் சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி தனது டுவிட்டரில் ரெயில்வே கேட்டரிங் ஊழியர்கள் அழுக்கு தண்ணீரால் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ரயில்வே கேட்டரிங் சர்வீஸ்களின் லட்சணத்தை பாருங்கள் என்ற வகையில் இருந்த அந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகி ரயில்வே துறைக்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்தது.
 
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து ரயில்வேதுறை அமைச்சர் பியூச் கோயல், நடிகை சபனா ஆஸ்மியிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த வீடியோ மலேசியாவில் உள்ள ரெஸ்டாரெண்டில் அதன் ஊழியர்கள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த வீடியோ என்றும், அந்த வீடியோவுக்கும் இந்திய ரயில்வே துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இதனை ஏற்றுக்கொண்ட சபனா ஆஸ்மி தனது தவறுக்கு வருந்துவதோடு, அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராகவும், இந்தியாவின் நல்லெண்ண தூதராகவும் இருந்துள்ள நடிகை சபனா ஆஸ்மி இதுபோன்ற உறுதி செய்யப்பட்ட தவறான வீடியோவை பதிவு செய்யலாமா? என்று டுவிட்டர் பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments