Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்பி ஆவதற்கான வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: ஆம் ஆத்மி எம்பி வலியுறுத்தல்..!

Advertiesment
AAP MP
, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (14:41 IST)
நாடாளுமன்ற உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சட்டா வலியுறுத்தியுள்ளார்.
 
மக்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 25 ஆகவும், மாநிலங்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டா,  வயதான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள இளம் நாடாக நாம் இருக்கிறோம் என்றார். 
 
மாறாக, இளம் அரசியல்வாதிகளைக் கொண்ட இளம் நாடாக நாம் இருக்க வேண்டும் என்றும் இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

 
எனவே இந்திய எம்.பி.க்களுக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க வேண்டும் என்று ராகவ் சட்டா வலியுறுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்றத்துக்கு வெளியே வினாத்தாள் கசிவு..! உள்ளே மழைநீர் கசிவு..! எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்..!!