Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்ட விளம்பரம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:05 IST)
20 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்ட விளம்பரம்!
10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரு விளம்பரம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட்டுள்ளது
 
20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு விளம்பரத்தில் செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்க, அந்த பந்து சிக்சர் ஆனவுடன் மைதானத்தில் உள்ள ஒரு பெண் ஓடிவந்து பேட்ஸ்மேனுக்கு அருகில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து காட்பரீஸ் டைரி மில்க் சாக்லேட் சாப்பிடுவது போன்ற ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கும்
 
இந்த விளம்பரம் தற்போது 20 ஆண்டுகள் கழித்துத் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது பெண்களும் கிரிக்கெட்டில் சாதனை செய்ததை அடுத்து ஒரு பெண் வெற்றிக்கான பந்தை அடிப்பது போலவும் வெற்றி பெற்றவுடன் மைதானத்திலிருந்து ஆண் ஒருவர் ஓடிவந்து அந்தப் பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு வாழ்த்துக் கூறி காட்பரீஸ் டைரி மில்க் சாக்லேட் சாப்பிடும் போது போன்றும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விளம்பரங்களும் தற்போது வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments