Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாண்டு என்கவுண்டர்: உ.பி நடந்தது குறித்து அகிலேஷ் யாதவ் கூறுவது என்ன??

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (12:04 IST)
ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். 
 
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றபோது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக விகாஸ் துபே சுட்டதில் 8 போலீசார் பலியாகினர். 
 
உபி முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் அம்மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். 
இதனையடுத்து மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து விசாரணைக்காக உபி மாநிலத்திற்கு அழைத்து வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகியதகா தெரிகிறது. அப்போது அந்த சமயம் காயமடைந்த போலீஸ் ஒருவர் துப்பாக்கியை எடுத்து மற்ற காவலர்களை சுட்டுள்ளார், தப்பிக்கவும் முயன்றுள்ளார்.  
 
எனவே போலீஸார் தற்காப்புக்காக என்கவுண்டர் நடத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  விகாஸ் துபேவை அழைத்துச்சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு தனது ரகசியத்தை காப்பாற்றிக்கொள்ள காரை கவிழ்த்துள்ளது என சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments