Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிவிலிருந்து மீண்டு வரும் அதானி குழுமம்.. பங்குகள் உயர்வு

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:37 IST)
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்த நிலையில் இன்று ஓரளவு அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கு பின்னர் அதானி குழுமத்தின் பங்குகள் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் உலக பணக்காரர் வரிசையில் 20 இடத்திற்கு கீழே அவர் தள்ளப்பட்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் என்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அதானி நிறுவனத்தின் மற்ற நிறுவனத்தின் பங்குகள் 5% முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அதானி கேஸ் பங்கின் விலை மட்டும் ஐந்து சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
110 கோடி டாலர் மதிப்பிலான கடன்களை முன்கூட்டியே செலுத்த இருப்பதாக அதானி வெளியிட்ட அறிக்கையின் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments