Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் அறிவுத்திறன் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியைவிட குறைவு: நடிகைக்கு பாஜக பதிலடி

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (09:12 IST)
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் நடிகையும், முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா என்ற 'குத்து' ரம்யா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே போவதை இந்தியா பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்டு பதிவு செய்த ஒரு டுவீட்டை வைத்து நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

இந்த போட்டியில் கேதார் ஜாதவ்வின் பந்துவீச்சு குறித்து குறிப்பிட்ட நடிகை திவ்யா, '“கேதர் ஜாதவின் பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுக்கு குறைந்துவிடவில்லை” என மத்திய அரசை கிண்டல் செய்தார்

இந்த டுவீட்டுக்கு பதிலடி கொடுத்த கர்நாடக பாஜக, 'கேதர் ஜாதவ் பந்து வீச்சை பற்றி எந்த கருத்தும் இல்லை. ஆனால், உங்கள் (திவ்யா ஸ்பந்தனா) அறிவுத்திறன் ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விட குறைவுதான்” என்று பதிவு செய்திருந்தது.

திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன் ஒருவர் 'கேதார் ஜாதவ்வின் பந்துவீச்சின் வேகம் குறைவுதான். ஆனால் நடிகை திவ்யாவின் உடை அதைவிட குறைவு' என்று திவ்யாவின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்