Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வின்னரை வளைத்து போட்ட காங்கிரஸ் கட்சி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (18:58 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரையுலக பிரபலங்களை அரசியல் கட்சிகள் வளைத்து போட தொடங்கிவிட்டன. ஏற்கனவே ஒருசில நட்சத்திரங்கள் இந்த வலையில் வீழ்ந்துள்ள நிலையில் தற்போது இந்தி பிக்பாஸ் 11வது சீசன் வின்னர் ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் நடிகை ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் தேர்தலில் அவர் மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக தீவிர ஓட்டுவேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து ஷில்பா கூறுகையில்,  'பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நாட்டை செய்துள்ளது. இதனால் இந்த கட்சியில் சேர முடிவு செய்தேன். தற்போது நமக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.  நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் காங்கிரஸ் கட்சியில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments