Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறுதலா தாக்கிடுச்சு... ஏவுகணை குறித்து இந்தியா விளக்கம்!

Advertiesment
இந்தியா
, சனி, 12 மார்ச் 2022 (08:41 IST)
சூப்பர்சோனிக் ஏவுகணை தாக்கியது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு விளக்கம் அளித்துள்ளது. 

 
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் அவ்வபோது எல்லையில் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவது தொடர்பான பிரச்சினைகளும் எழுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
 
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், ஹரியானா மாநிலம் சிறுசா நகரில் இந்தியா சோதனை செய்த சூப்பர்சோனிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்து தாக்கியது. அதிர்ஷ்டவசமாக இதனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்தியா இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில்,  பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது என விளக்கம் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புழல் சிறையிலிருந்து விடுதலையானார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்