Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாத்தாக்களை டார்கெட் செய்யும் இளம்பெண்கள்: முதலிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (14:00 IST)
பஞ்சாப்பில் முதியவர் ஒருவரை திருமணம் செய்த இளம்பெண், முதலிரவின் போது நகைகளை திருடி ஓட்டம்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலம் சர்கோதாவை சேர்ந்தவர் முகமது முஸ்தப்பா(70). இவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  பேத்தி வயதுடைய நஜ்மா(28) என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
 
அன்றிரவு முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. முதலிரவின்போது முகமது, மனைவி நஜ்மாவிற்கு முதல் மனைவியின் நகைகளை கொடுத்துள்ளார். அப்போது நஜ்மா முஸ்தப்பாவிற்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார். இதனை குடித்த அவர் மயங்கினார்.
 
அடுத்த நாள் காலையில் எழுந்த முஸ்தப்பாவிற்கு பேரதிர்ச்சி, வீட்டில் இருந்த பணம், நகை மற்றும் ஆடம்பரப்பொருட்களை நஜ்மா முழுவதுமாக திருடிக்கொண்டு தப்பித்துள்ளார். அதிர்ச்சியடைந்த முஸ்தப்பா இதுகுறித்து காவல் நிலையட்தில் புகார் அளித்தார். 
 
புகாரின் பேரில் போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். இதே போல் இளம்பெண்கள் முதியவர்களை குறிவைத்து கல்யாண நாடகம் நடத்தி வருகின்றனர். இதனை உடனடியாக தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments