Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை அவமதித்த முன்னாள் முதல்வர் ... எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (20:01 IST)
மைசூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினரான சித்தாராமைய்யா இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னர் எம்.எல்.ஏ.வாக இருந்த மைசூர் சாமுண்டீஸ்வரி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மைக்கை வாங்கி தனது பிரச்சனையை தெரிவித்தார்.
 
ஆனால் அந்தப் பெண் பேசுவதைக் கேட்ட சித்தாராமய்யா சிறிது நேரத்திலேயே  பொறுமை இழந்தவராகி சட்டென்று அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயற்சித்தார்.அப்போது சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டு கீழே விழுந்தது.
 
தன்னிடமிருந்து ஒலிபெருக்கியை பறித்த நிலையிலும் அப்பெண் தன் குறைகளை அவரிடம் வலுவாகத் தெரிவித்தார்.அதற்கு சித்தராமைய்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இந்த வீடியோ காட்சிகள் பல்வேறு சேனல்களில் பலமுறை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு பாஜக கட்சி தலைவர்கள் பலரும் பலத்த எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர்.
 
அதில் முக்கியமாக காங்கிரஸ் தலைவர் ராகுலின் அம்மாவை  (சோனியா காந்தியை தவிர மற்ற பெண்களை காங்கிரஸார் மதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments