சவரன் ரூ.25,000 என்ற விலையை தொட்டு தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, ஒரு சவரன் ரூ.25,302, ஒரு கிராம் ரூ.3,129க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்த மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.24,168க்கு விற்கப்பட்டது. கடந்த 25 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.24,736க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25,000 தாண்டியது. கிராமுக்கு ரூ.3,129 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,032-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,276 ஆகவும், சவரனுக்கு ரூ.26,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்துள்ளது. எனவே உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது என தங்கம் விலை உயர்வுக்கு காரணம் கூறப்படுகிறது.