Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலி: புனேயில் பதற்றம்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (10:26 IST)
மகாராஷ்டிரா மாநிலம் பூனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடிக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுற்றுசுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் சேதமடைந்தன.

அந்த குடிசைகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் குடிசைகளில் வசித்த மக்கள் 15 பேர் உயிரிழந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து அம்மாவட்ட கலெக்டர், பலத்த மழை பெய்ததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், இதன்மூலம் கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமான பணி வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெரும்பாலானோர் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனபது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments