Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடைமழை வெள்ளத்தில் அந்தரத்தில் தொங்கும் பெண்: அதிர்ச்சி வீடியோ

Advertiesment
National News
, வெள்ளி, 28 ஜூன் 2019 (18:21 IST)
மும்பையில் பருவ மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. சாலைகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்து கொள்ளும் அளவுக்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ரோட்டில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட இருந்த சுற்றுலா பயணி ஒருவரை சிலர் காப்பாற்றியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் அருமை பெருமைகளை பற்றி கேள்விபட்டு சுற்றி பார்ப்பதற்காக மும்பையில் வந்து இறங்கியுள்ளார். பருவ மழைக்காலம் என்பதால் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. சுரங்க பாதை வழியாக வந்து கொண்டிருந்த அந்த பெண் சுரங்க பாதை மழையால் நிரம்புவதை பார்த்து சுதாரித்து வெளியே வந்துள்ளார். சற்றுநேரத்தில் சுரங்க பாதையை அடைத்த வெள்ளம் சாலையில் ஆறுபோல ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.

அதில் காலை வைத்தால் தண்னீர் இழுத்து சென்றுவிடும் என்று உணர்ந்த அந்த பெண் மேலே சாலையை நோக்கி உதவி வேண்டி கத்தியிருக்கிறார். அவரது சத்தத்தை கேட்டு கீழே பார்த்த சிலர் உடனடியாக இறங்கி அவரை மேலே தூக்கிவிட, மேலே நின்ற சிலர் அவரை மேலே இழுக்க அந்தரத்தில் தொங்கியபடி ஒருவழியாக மேலே சென்று சேர்ந்தார் அந்த பெண்.

இந்தியாவை சுற்றிபார்க்க வந்தவருக்கு எதிர்பாராத அனுபவம் கிடைத்திருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்ணீர் என்று நினைத்து ஆசிடை குடித்தவர் பலி!!