Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசா ரயில் விபத்து நடப்பதற்கு முன் எடுத்த வீடியோ வைரல்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (21:11 IST)
ஒடிசா ரயில் விபத்து நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், ஒடிஷா கோர ரயில் விபத்து நடைபெறுவதற்கு  சில நொடிகளுக்கு முன்பாக ஏசி பெட்டியில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு தூய்மை  பணியாளர் ஒருவர் ரயிலில் உள்ள பெட்டிகளை தூய்மை செய்து வருகிறார். அப்போது சீட்டில் பயணிகள் படுத்து உறங்குகின்றனர்.  சிலர் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று  நொடியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 

https://sharechat.com/post/dWQwaay?referrer=copyLink

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments