Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் குழப்பிய குட்டை: உருவாகிறது 3வது அணி

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (07:06 IST)
ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதை பல அகில இந்திய எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்காததால் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையவிருந்த நிலையில் தற்போது 3வது அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் ஏற்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் மம்தாவும் ஸ்டாலின் கருத்தை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் சரிசமமாக மக்களவைத் தொகுதிகளை பிரித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் இணைய வாய்ப்புள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15-ம் தேதி மாயாவதியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments