Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாரதிராஜா சந்திப்பு! விஷால் விவகாரமா?

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (23:11 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் விஷால் மீது ஒருசில தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டும் அளவுக்கு விஷயம் சீரியஸாகிவிட்டது.

இந்த நிலையில் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது க்ரீன்வேஸ் இல்லத்தில் இயக்குனர் பாரதிராஜா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் விஷால் விவகாரம் குறித்து பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே தமிழக அரசை விஷால் கடுமையாக விமர்சனம் செய்ததால் அவர் மீது காட்டமாக ஆளும் கட்சியினர் இருப்பதாக கூறப்படுவதுண்டு. ஆளும் கட்சியின் சேனலிலும் விஷாலுக்கு எதிரான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே நாளை தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்தபின் விஷாலுக்கு ஆப்பு தயாராகும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் இருந்து ஆள் எடுக்க வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்: டிரம்ப்

முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை..!

இன்றிரவு 19 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

சின்னசாமி மைதான சோகம்: நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments