Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்த ஆசிரியை: ரத்த காயங்களுடன் சிறுமி காவல்நிலையத்தில் புகார்

2ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்த ஆசிரியை: ரத்த காயங்களுடன் சிறுமி காவல்நிலையத்தில் புகார்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:39 IST)
கர்நாடக மாநிலம், பெங்களூர், நெலமங்களா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பருடைய மகள் பாவனா (7)  அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்தவுடன் பாவனா ஒரு தனியார் டியூசனுக்கு சென்று வருகிறாள்.


 


இதனிடையே பாவனா நேற்று முன்தினம் வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த டியூசன் ஆசிரியை லதா, சிறுமியை கண்டித்ததோடு பெல்ட்டால் தாக்கியுள்ளார். இதனால் பாவனாவின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.  

இது பற்றி பெற்றோரிடம் சிறுமி கூறியிருக்கிறாள்.  அதிர்ச்சி அடைந்த பாவனாவின் பெற்றோர் உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, இதுதொடர்பாக டியூசன் ஆசிரியை லதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தெரிந்த, டியூன் ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லதாவை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: முதல்வர் முடிவுக்கு பாஜக எதிர்ப்பு

தாய் மகள் கொலை வழக்கு: ட்ரோன் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீஸ்

ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி.. என்ன காரணம்?

அமர்நாத் யாத்திரை தொடங்குவது எப்போது? ஆலய வாரிய கூட்டத்தில் அறிவிப்பு..!

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments