Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய திராட்சை ஒயின்

தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிய திராட்சை ஒயின்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:19 IST)
பிரான்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது துறைமுக நகரமான சிடியில் உள்ள மெரிசெல் அவின்யூ பகுதியில் திடீரென்று திராட்சை ஒயின் பெருக்கெடுத்து ஓடியது.



தெருக்களில் எல்லாம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் வாசம் திராட்சை மதுவுக்கு ஒப்பானதாக இருப்பதை அறிந்த மக்கள் பின்னர் அதை உறுதியும் செய்தனர். இது பல பகுதிகளில் அமைந்துள்ள வாகன நிறுத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிரம்பியதை அடுத்து குறிப்பிட்ட பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் தெருக்களில் பெருக்கெடுத்த திராட்சை மதுவை குழாய் வைத்து அப்புறப்படுத்தினர். சம்பவப்பகுதிக்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,  பிரோன் எஸ்.ஏ என்பவருக்கு சொந்தமான திராட்சை மது ஆலையில் இருந்து இந்த மது பெருக்கெடுத்துள்ளது தெரியவந்தது.

அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த 5 பெரிய தொட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த மதுவை மர்மநபர்கள் சிலர் திறந்து விட்டுள்ளது விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. பெருக்கெடுத்த திராட்சை மதுவின் அளவு 50,000 லிட்டர் என கூறப்படுகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் வெற்றி கிடைத்தாலும் ஆட்சி அமைக்க வேண்டாம்: இந்தியா கூட்டணிக்கு எம்பி வேண்டுகோள்

5 பேரின் மரணமென்பது திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலை: சீமான்

காவல் உதவி ஆய்வாளரின் அட்டூழியம்!

2 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. சாதித்தது என்ன?

ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்- முத்தரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments