Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் உட்பட பல மாணவர்கள் சீரழித்த கொடூரம்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (10:30 IST)
பாட்னாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமிதா என்ற மானவி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சுமிதா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்.
 
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், சுமிதா கழிவறைக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்த 5 மாணவர்கள், அவரை கற்பழித்து அதனை படமெடுத்துள்ளனர். இதனை அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பியதால், அவர்களும் மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.
 
இந்த விஷயம் பள்ளியின் இரு ஆசிரியர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தகப்பன் ஸ்தானத்தில் இருந்த அந்த தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் மீண்டும் அந்த மாணவியை கற்பழித்துள்ளனர். இவ்வாறு 7 மாதமாக அந்த மானவர்களுடனும், ஆசிரியர்களுடனும் சிக்கி சீரழிந்துள்ளார் சுமிதா.
 
ஒரு கட்டத்தில் இதனை தாங்க முடியாத சுமிதா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் அந்த மனித மிருகங்கள் மீது வழக்கு பதிந்த போலீஸார்,  தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்