Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இரண்டு வங்கி தேர்வுகள்: விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (09:45 IST)
ஒரே நாளில் இரண்டு வங்கி தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் கணினிமயமாகிவிட்டதால் வங்கிக்கு ஆள் எடுப்பதே அபூர்வமாக உள்ளது. இந்த நிலையில் IBPS என்ற அரசு வங்கி அமைப்பும், லட்சுமி விலாஸ் வங்கியும் தனித்தனியே ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த இரண்டு வங்கி தேர்வுகளுக்கும் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளதாக இரண்டு வங்கி அமைப்புகளும் அறிவிப்பு செய்துள்ளன. இதனால் இரண்டு வங்கிகளுக்கும் விண்ணப்பம் செய்தவர்கள் தற்போது ஒரு தேர்வை மட்டுமே எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஏதாவது ஒரு தேர்வின் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments