Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுடன் சண்டை - பேஸ்புக் லைவில் தற்கொலை செய்த இளம்பெண்

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (14:35 IST)
மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் ஏற்பட்ட சண்டையால், பேஸ்புக் லைவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். இதனால் அவர்களை கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.
 
மேற்கு வங்க மாநிலம்  பாரகான் மாவட்டம் சோனார்புரை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார்.
 
இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால், அந்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனது தற்கொலையை காதலன் பார்க்க, தனது தற்கொலையை பேஸ்புக் லைவ் செய்தவாறே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
பணிமுடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் பெற்றோர் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அந்த பெண்ணின் காதலனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments