Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது மகனை கயிற்றில் தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய தந்தை; நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (13:53 IST)
ராஜஸ்தானில் பெற்ற மகனை,அவரது தந்தையே கயிற்றில் தொங்கவிட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமாத்தைச் சேர்ந்தவர் ஜெயின் சிங். இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் தங்களது வீட்டினருகே இருந்த மணல் குவியலில் விளையாடி உள்ளனர். அதனால் அவர்களது துணிகள் அழுக்காகி இருக்கிறது. வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய ஜெயின் சிங், குழந்தைகளின் துணி அழுக்கானதைக் கண்டு கோபமடைந்து, அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கினார். கொடூரத்தின் உச்சமாய் பெற்ற பெற்ற மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு கொடூரமாக தாக்கியுள்ளார் அந்த கொடூர தந்தை. 
 
இந்த கொடூர காட்சியை ஜெயின் சிங்கின் சகோதரர் வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வெளியானதையடுத்து ஜெயின் சிங் மற்றும் அவரது சகோதரை போலீசார் கைது செய்தனர். பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கொடூர தாக்குதல் நடத்திய ஜெயின் சிங்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments