Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிரான கருத்தா?

Advertiesment
ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிரான கருத்தா?
, வெள்ளி, 28 டிசம்பர் 2018 (19:26 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்த தகவல்களையும் தனது அறிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் குறித்த விமர்சனங்களும் பதிவு செய்வதுண்டு. இவருடைய டுவிட்டர் பக்கத்தை சுமார் 1.25 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் உருவாக்கி அதில் ஸ்டாலின் கருத்திற்கு எதிராகவும், மதஉணர்வுகளுக்கு எதிராக கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்.

webdunia
இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினர் ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டவர் மீது நடவடிக்கை வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்சோ சட்டத்தில் திருத்தம்: குழந்தை பாலியல் குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா?