Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்தில் மூட நம்பிக்கையால் ஒரு குழந்தை பலி

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (16:49 IST)
மத்திய பிரதேச மாநிலம் ஷங்டோல் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில்,மூட நம்பிக்கையால் ஒரு குழந்தை பலியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

ஷங்டோல் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகமான அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள 3 மாதக் கைக்குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக் கொடுப்பதற்குப் பதிலாக, அம்மக்களின் நம்பிக்கையாக, சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வயிற்றில்  குத்தினால்  நோய் குணமாகிவிடும் என்பது அப்பகுதி மக்களின்  நம்பிக்கையாக இருந்துள்ளது.

இதன்படி, குழந்தையின் வயிற்றின் 51முறை  சூடான இரும்புக் கம்பியால் வயிற்றில் குத்தியுள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்டு, அக்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டும் குழந்தையின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்துள்ளது.  இதையடுத்து, குழந்தையின் உடல்  நிலை மேலும் மோசமாகவே, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அதன்பின்,15 நாட்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இத்குறித்து  நடவடிக்கை எடுக்கும்படி தலைமை மருத்துவ அதிகாரிக்கு மருத்துவர் ஹிதேஷ் வாஜ்பாய் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments