Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாத வாக்குகள்: நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்..!

Mahendran
செவ்வாய், 30 ஜனவரி 2024 (17:01 IST)
சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது

 சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது

மேலும் இந்த தேர்தலில் 20 கவுன்சிலர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணியை சேர்ந்த 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 36 வாக்குகளில் 16 வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் என்பவர் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய  இரண்டு கட்சிகளும் சேர்ந்து 20 கவுன்சிலர்கள் வைத்திருக்கும் நிலையில் 16 கவுன்சிலர்கள் வைத்திருக்கும் பாஜக வெற்றி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் எட்டு பேர் வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்தார்

இந்த நிலையில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டதை அடுத்து நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments