Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெறிக்கவிட்ட வேட்பாளர்: ஓட்டுக்காக குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டு அலப்பறை

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:20 IST)
தெலிங்கானாவில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு ஆய் கழுவிவிட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலிங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஓட்டுகளை பெற வேட்பாளர்கள் பல்வேறு ட்ரிக்குகளை கையாண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தெலிங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஒரு குழந்தை வீட்டின் முன்பு இயற்கை உபாதைகள் கழித்துக்கொண்டிருந்தது.
 
இதனைப்பார்த்த அமைச்சர் குழந்தை அருகே சென்று குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டார். அப்போது அவருக்கு அருகே ஜால்ராக்கள் ஜெய் தெலிங்கானா என முழக்கமிட்டனர். இது இணையத்தில் வெளியாகி இந்த செயலை செய்த வேட்பாளரை பலர் கலாய்த்து வருகிறார்கள்.
 
ஏற்கனவே வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஷேவிங் செய்து விடுவது, குளிக்க வைப்பது, சமைத்து தருவது போன்ற அட்ராசிட்டிகளை செய்து வந்த வேட்பாளர்களே இந்த வேட்பாளரின் செயலைக் கண்டு நமக்கே டஃப் கொடுக்க ஒருத்தன் வந்துவிட்டான் 
என அதிர்ந்து போய்விட்டனராம். 
 
இன்னும் அடுத்தடுத்து என்ன அட்ராசிட்டிகளை செய்ய காத்திருக்கிறார்களோ? இந்த ஈடுபாடு ஏன் ஜெயிச்ச பிறகும் பலருக்கு வருவதில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments