Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்

Advertiesment
Doctors Dinesh Kumar
, திங்கள், 5 ஜூன் 2023 (19:26 IST)
விளையாடும் போது பாம்பை சாப்பிட்ட சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூரில் வசிப்பவர் தினேஷ்குமார். இவரது மகன் ஆயுஷ் ( 3 வயது). இவர் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பாட்டியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் முன் வந்தனர். அப்போது, ஆயுஷ் தன் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெற்றோர், அதை வாயில் இருந்து எடுத்தபோதுதான் அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே, இறந்த பாம்பை பையில் போட்டு, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 24 மணி நேரக் கண்காணிப்புக்குப் பிறகு குழந்தை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர்.

தற்போது, குழந்தை  மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி கூலிங் கிளாஸ் போட்டு ஒடிஷாவுக்கு சுற்றுலா சென்று வந்தார்: ஜெயக்குமார்..!