Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போன் வெடித்ததில் 12 வயது சிறுவன் பலி

Advertiesment
செல்போன் வெடித்ததில் 12 வயது சிறுவன் பலி
, புதன், 11 ஏப்ரல் 2018 (11:08 IST)
சார்ஜ் போட்டபடியே செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், செல்போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.
செல்போன் மீதான மோகம் இன்றைய இளம் தலைமுறையினரிடமும், சிறுவர்களிடையும் அதிகமாக உள்ளது. செல்போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சார்ஜ் போட்டபடியே செல்போன் உபயோகிக்காதீர் என்று பல்வேறு விழிப்புணர்வு அளித்தாலும், பலர் இதனை கேட்பதில்லை. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் குத்ராப்பரா என்ற கிராமத்தில் 12 வயதான சிறுவன் ரவி சோன்வான் வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். செல்போனில் சார்ஜ் தீர்ந்து போனதால், சார்ஜ் போட்டபடியே கேம் விளையாடிக் கொண்டிருந்தான். ஏற்கனவே சூடாகி இருந்த செல்போன் சார்ஜ் போட்டதால் மேலும் சூடாகி திடீரென்று வெடித்தது. 
webdunia
சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவத்தால் சிறுவனின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்போ ஆன்மீக சுவாமி இப்போ அருமை சகோதரர் - ஜெயக்குமார் அந்தல் பல்டி