Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் பணியில் சிக்கி தவிக்கும் 900 தமிழக லாரி டிரைவர்கள்

Advertiesment
காஷ்மீர் பணியில் சிக்கி தவிக்கும் 900 தமிழக லாரி டிரைவர்கள்

Arun Prasath

, வெள்ளி, 20 டிசம்பர் 2019 (11:59 IST)
தமிழகத்தை சேர்ந்த 900 லாரி டிரைவர்கள், காஷ்மீரில் பனியில் சிக்கி சாப்பாடின்றி தவித்து வருகின்றனர்.

காஷ்மீரில் விளையும் ஆப்பிள்களை ஏற்றி வருவதற்கு தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து ஏராளமான சரக்கு லாரி கடந்த 7 ஆம் தேதி சென்றுள்ளன.

இந்நிலையில் தற்போது அங்கே பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதில் கரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆப்பிள் லோடுடன் தமிழகத்திற்கு புறப்பட்ட 450 லாரிகள் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டுள்ளன. பனியில் சிக்கிக்கொண்டதால் லாரி டிரைவர்கள் கிளீனர்கள் உட்பட 900 க்கும் மேற்பட்டவர்கள் சாப்பாட்டுக்கு திண்டாடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இம்ரான்கானுக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு உள்ளது: பாஜக பிரமுகர்