Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலுடன் 9 ஒப்பந்தங்கள்; மோடி புரட்சியாளர் என புகழ்பாட்டு

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (18:51 IST)
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோடியை புரட்சியாளர் என புகழ்ந்துள்ளார்.

 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
 
இருநாடுகள் இடையே பாதுகாப்பு, ஹோமியோபதி மருந்து உற்பத்தி, விவசாயம், திரைப்படத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், சைபர் துறை உள்ளிட்ட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இஸ்ரேலிடமிருந்து விவசாயத்திற்கு ஒத்துழைப்பு மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களின் நேரடி அந்நிய முதலீட்டை இந்திய நிறுவனங்கள் பெற முடியும் என மோடி கூறியுள்ளார்.
 
மோடி புரட்சிகரமான தலைவராக உள்ளார். மோடியால் வருங்காலத்தில் புரட்சிகரமான இந்தியா உருவாகும். இஸ்ரேலுக்கு வந்த முதல் இந்திய தலைவர் மோடி. இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments