Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (15:48 IST)
தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு சென்று கொண்டிருந்து அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
தெலுங்கானாவில் உள்ள வராங்கல் வாவட்டத்தில் இருந்து கரீம் நகருக்கு அரசு பேருந்து ஒன்று நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து செங்கர்லா என்ற பகுதிக்கு அருகில் செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதியது.
 
இந்த கோர விபத்தில் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது. இதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments