Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்; பரிதாபமாக பலியானதால் பரபரப்பு!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (18:16 IST)
5 வயது சிறுமி தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தெருநாய்கள் அந்த சிறுமியை கடித்து குதறியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த 6 தெரு நாய்கள் சிறுமியை மாறி மாறி கடித்து குதறின. 
 
இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இதனை அடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 5 வயது சிறுமி மத்திய பிரதேசத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments