Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல். வெற்றி பெறுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (22:22 IST)
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளிவந்துள்ளது


 


உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் பதவியிழப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் கோவா மாநிலத்தில் பாஜக 18 இடங்களும், காங்கிரஸ் 15 இடங்களும், ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள் மற்ற கட்சிகள் 5 இடங்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே இங்கு ஆட்சி அமைப்பது யார் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை உள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக சம இடங்களை பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகளின் ஆதரவை பொறுத்து இங்கு ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் ஆட்சிக்கு தேவையான 31 இடங்களை பிடிப்பது கடினம் என்பதால் இங்கும் இழுபரி ஏற்படலாம்

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆம்ஆத்மி அதிக இடங்களை பெற்று பெரும்பாணன்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு படுதோல்வி கிடைக்கும் என தெரிகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments