Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து...

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (16:57 IST)
டெல்லியில் உள்ள  சாஸ்திரி நகரில் 4 மாடிக் கட்டிடம் திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனில் முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சாஸ்திரி நகரில் உள்ள 4 மாடிக் கட்டிடம்  நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதைப் பார்த்த பகுதி மக்களும், அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட 4 மாடிக் கட்டிடம் பழமையான கட்டிடம் எனவும், அது மக்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல என்றும்,  அதில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு சூடானை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. விசா நிறுத்தம்.. என்ன காரணம்?

சத்திய சோதனை போல் பொய்களின் சோதனை என மோடி புத்தகம் எழுதலாம்: ராகுல் காந்தி

சீனாவுக்கு மட்டும் Extra 50% வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments