Publish Date: Mon, 05 Dec 2022 (18:53 IST)
Updated Date: Mon, 05 Dec 2022 (18:58 IST)
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்து கணிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த போது வெறும் 45 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்ற கருத்துக் கணிப்பு குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்
டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக் கணிப்பு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 69 முதல் 91 வார்டுகளையே பாஜக கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.