Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ தளபதியின் மனைவி கழுத்தறுத்து கொலை: டெல்லியில் பரபரப்பு

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (21:52 IST)
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியின் பிசியான பகுதிகளில் ஒன்றான கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று 30 வயது பெண் ஒருவர் பிசியோதரபி செய்வதற்காக மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
 
பட்டப்பகலில் பிசியான சாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
பின்னர் அந்த பெண் குறித்த முதல்கட்ட விசாரணையில் அவர் ராணுவ தளபதி ஒருவரின் மனைவி என்பது என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு..!

கோவை மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..!

2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்.. த்ரில் அனுபவம்..!

தடையை மீறி மதுரையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: அண்ணாமலை

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? தமிழிசைக்கு கிடைத்த புதிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments