Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 சிறுமியை சீரழித்து, சிறுமியின் முகத்தை சிதைத்த அயோக்கியன்

Advertiesment
6 சிறுமியை சீரழித்து, சிறுமியின் முகத்தை சிதைத்த அயோக்கியன்
, சனி, 23 ஜூன் 2018 (09:24 IST)
6 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, சிறுமியின் முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டம் கொண்டுவரப்பட்டும் இந்த அவல சம்பவங்கள் குறைந்த பாடில்லை.
 
மத்திய பிரதேச மாநிலம் மொரினா நகரை சேர்ந்த சிறுமி அனு. இவர் தனது பெற்றோருடன் குவாலியர் நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றார். சிறுமியின் பெற்றோர் திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததால், சிறுமியை கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
 
சற்று நேரம் கழித்து மகள் காணாததால், அனுவின் பெற்றோர் மணடபம் முழுவதும் தேடினர். ஆனால் எங்கு தேடியிம் சிறுமி கிடைக்காததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மண்டபத்திற்கு சற்று தொலைவில், சிறுமியின் உடலைக் கைப்பற்றினர். சிறுமியின் முகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருந்தது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
சிசிடிவி கேமரா காட்சி மூலம், விசாரணையை மேற்கொண்ட போலீஸார், சமையல்காரன் ஒருவன் சிறுமியை வெளியே அழைத்துச் சென்றது தெரிய வந்தது. தலைமறைவாக இருக்கும் அவனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ளீஸ் பா குடிக்காதீங்கன்னு சொன்ன மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை