மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் முக்கிய விவசாய பகுதியான குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் காசர்கோடு, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களை தவிர, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம் உள்பட மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேய்மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 19 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 2 நாளில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.