Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை.. வருமான வரித்துறை அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 17 மார்ச் 2024 (15:26 IST)
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகமாக இருக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என்பதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம்  தெரிவிக்கலாம்.

மேலும் புகார்களை 1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ: திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் இவைகளா? நாளை வேட்பாளர் பட்டியல்..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments