Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரில் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதா? வங்கி ஊழியர்கள் அறிக்கையால் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (18:33 IST)
டிசம்பர் மாதம் ஏற்கனவே கிறிஸ்மஸ் உள்பட ஒரு சில விடுமுறை நாட்கள் இருக்கும் நிலையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 24 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்படும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் 11 ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அனைத்து வங்கிகளிலும் ஒரே நேரத்தில் வேலை நிறுத்தம் இல்லை என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4 முதல் 14ஆம் தேதி வரை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் மற்றும்  கிறிஸ்துமஸ் உள்பட  11 விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை 7 நாட்களை சேர்த்து மற்றும் 24 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.  

ஆனால் விடுமுறை நாட்களில் அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் மாநிலங்களில் அளிக்கப்படும் விடுமுறை மற்ற மாநிலங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments