Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ராணுவ வீரர்களின் பெயர்களும் இல்லையா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:32 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் லட்சக்கணக்கானோர் பெயர் இல்லாத நிலையில் கார்கில் போரின்போது இந்தியாவுக்காக போரிட்ட 20 ராணுவ வீரர்களின் பெயரும் இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறிய வெளிநாட்டினரை கண்டுபிடித்து அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. இந்த பதிவேடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையே சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பேர் இடம் பெறவில்லை என்பது ஐநாவுக்கே அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. 
 
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து, இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 20 பேர்களின் பெயர்  தேசிய குடிமக்கள் பதிவே விடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கார்கில் போரின்போது பணியாற்றிய இந்த 20 ராணுவ வீரர்களும் பார்பெடா மாவட்டத்தில் உள்ள சருகாரித் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்களின் பெயர்கள் மட்டுமின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயரும் இந்த பட்டியலில் இல்லை என்ற செய்தி இந்த பட்டியலையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments