Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டவுட் கிளியர் பண்ண வந்த பெண்ணை பலாத்காரம் செய்த மாணவர்கள்!

டவுட் கிளியர் பண்ண வந்த பெண்ணை பலாத்காரம் செய்த மாணவர்கள்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (15:49 IST)
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சக மாணவி ஒருவரை இரண்டு மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


 
 
புனேவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அந்த மாணவி(19). அதே கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் தங்கள் பிராக்டிக்கல் தேர்வுக்கு உதவுமாறு கேட்டுள்ளனர்.
 
மாணவியும் சரி என்று சொல்ல, தங்கள் ரூமிற்கு வந்து பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து ரூமிற்கு வந்த வந்த அந்த மாணவியை கதவை தாளிட்டு இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதனை யாரிடமும் கூறாமல் தவிர்த்து வந்துள்ளார். அதற்கு அடுத்த நாள் ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது அதில் நேற்று நடந்த சம்பவம் பற்றி எனக்கு தெரியும் நேரில் வந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்த நபரும் அந்த மாணவியிடன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி அதே கல்லூரியில் படிக்கும் தனது சகோதிரியிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் குற்ற செயலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்