இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அயலுறவுக் கொள்கைகளை விமர்சனம் செய்ததால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சசி தரூர்.
டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சசி தரூர், நேருவின் அயலுறவுக் கொள்கைகளைப் பற்றி விமர்சித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகில் அகமது கூறுகையில், சசி தரூரின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது. நேருவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான சசி தரூருக்கு உள்ளது. மாறாக அவற்றை விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.