Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செக்ஸ் படம்... இல்லையேல் பேஸ்புக், ட்விட்டர்- அரசு ஊழியர்களின் அட்டகாசம்!

Advertiesment
செக்ஸ் படம்
, செவ்வாய், 7 ஜனவரி 2014 (10:19 IST)
FILE
கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது.

குறிப்பாக, கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனாலும் சும்மா விட்டு விடுவார்களா?

அலுவலக கம்ப்யூட்டர்களின் வழியாக ‘பேஸ்புக்’, ’டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களில் அரசு ஊழியர்கள் அரட்டை அடித்து பொழுதை கழிக்க தொடங்கினார்கள்.

இதுவும் தலைமை செயலாளரின் கவனத்துக்கு சென்றதால் ‘பேஸ்புக்’, 'டுவிட்டர்’ மற்றும் ‘ஆன் லைன் ஷாப்பிங்’ இணைய தளங்களுக்குள்ளும் நுழைய முடியாதபடி ‘ஃபயர் வால்’ (தடுப்பு சுவர்) மென்பொருளை கர்நாடக அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களில் பொருத்த அரசு உத்தரவிட்டது.

தெரியாமல் தப்பு செய்ய இந்த தொழில் நுட்ப உலகில் வாய்ப்பேயில்லை. மிகப்பெரிய கண்காணிப்புச் சமூகத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற அறிவுடனேயே இனி காரியங்களைச் செய்யவேண்டும் என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணமாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil