கர்நாடகா அமைச்சர்கள் 3 பேருக்கு ஆப்பு வைத்த ’செக்ஸ்' படம்
, புதன், 8 பிப்ரவரி 2012 (10:55 IST)
கர்நாடக சட்டப்பேரவையிலேயே செல்போனில் செக்ஸ் படம் பார்த்த கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையை கட்சி மேலிடம் எடுத்துள்ளது.கர்நாடகவில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நிலமோசடி தொடர்பாக பதவியில் இருந்து விலக்கினார். இதைத் தொடர்ந்து சதானந்த கவுடாவை முதலமைச்சராக நியமித்தது பா.ஜ.க. மேலிடம்.இந்த நிலையில் சட்டப்பேரவையில் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக அமைச்சர்கள் லக்ஷ்மன் சவேதி, சி.சி பாட்டீல், கிருஷ்ணா பால்மர் ஆகியோர் மீது புகார் எழுந்தது.
ஆனால், அமைச்சர் கிருஷ்ணா பால்மர் ஆபாச படம் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதற்காகவெல்லாம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றார்.தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்திலும் ஆபாச வீடியோ படம் வெளியிடப்பட்டதால் கர்நாடக பா.ஜ.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. மேலிடம் இன்று காலை அவரசமாக கூடிய ஆலோசனை நடத்தியது.