Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Beast Review: தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’: திரைவிமர்சனம்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (07:38 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படம் எப்படி உள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
 
ராஜஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட்டம் நடத்தும் அதிரடி தாக்குதலை ரா அதிகாரியான விஜய் முறியடிக்கிறார். ஆனால் இந்த தாக்குதலில் குழந்தை ஒன்று பரிதாபமாக பலியாகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஜய் ரா பணியை உதறிவிட்டு சென்னை வருகிறார்
 
சென்னையில் விடிவி கணேஷ் மியூசிக் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது பூஜாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. அதன்பின் காதல், அரபி குத்து பாடல் என ஜாலியாக படம் செல்கிறது. இந்த நிலையில் திடீரென சென்னையில் உள்ள மால் ஒன்று தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அந்த மாலில் விஜய், பூஜா, யோகி பாபு உள்ளிட்டோர் உள்ளனர் 
 
மாலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள் தங்கள் தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்க அந்த நிபந்தனைகளை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளிடம் செல்வராகவன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த நிலையில் மற்றொரு புறம் தனி ஒரு ஆளாக பணயக் கைதிகளை காப்பாற்ற முடியும் செய்யும் விஜய் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தான் படத்தின் கிளைமாக்ஸ்
 
விஜய் இந்த படத்தில் சூப்பர் ஆகவே நடித்துள்ளார். அதிக வசனம் இல்லை என்றாலும் அவரது கண்களே பல வசனங்களை பேசுகிறது. பூஜா வழக்கம்போல் பாடலுக்கு வருகிறார். ஒரு சில காமெடி காட்சிகளும் விஜய் உடனான ரொமான்ஸ் காட்சிகளும் ரசிக்கும் வகையில் உள்ளது. ரெடின்கிங்ஸ்லி, யோகி பாபு காமெடிகள் வழக்கம்போல் சிரிக்க வைக்கின்றன
 
நெல்சனின் திரைக்கதையில் வில்லன் படு வீக்கான வில்லன் இருப்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது வழக்கமான காமெடி இந்த படத்தில் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ரசிக்க முடிகிறது
 
அனிருத்தின் இரண்டு பாடல்கள் திரையில் தோன்றும் போது தியேட்டரே அதிர்கிறது. அதேபோல் ஒவ்வொரு காட்சியிலும் அவரது பின்னணி இசை அசத்தலாக உள்ளது 
 
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஒரு பெரிய வாழ்த்துக்கள். மொத்தத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கான படம் என்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நடுநிலை ரசிகர்களுக்கான படம் இல்லை என்பதுதான் உண்மை.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments