Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீராவுடன் கிருஷ்ணா

மீராவுடன் கிருஷ்ணா
, புதன், 28 மார்ச் 2012 (19:37 IST)
FILE
இல்லறம் குறித்த கருத்தை சொல்லும் படம் மீராவுடன் கிருஷ்ணா. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன் ஹீரோவாக நடித்தும் இருக்கிறார் ஏ.கிருஷ்ணா.

துவார்கமி கி‌ரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆர்.ஏ.விஜய் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளார். அமெ‌ரிக்காவில் பணிபு‌ரிந்து வந்த இவர் சினிமா மீதுள்ள காதலால் சென்னை வந்து இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளார். இந்தப் படத்தை பொறுத்தவரை ஸ்கி‌ரிப்ட்தான் ஹீரோ. நிச்சயமாக படம் பார்க்கிறவர்களை இந்தப் படம் கவரும் என்கிறார் நம்பிக்கையுடன்.

நான்கு சுவருக்குள் நடக்கும் பாலியல் சந்தோஷம் மட்டும் இல்லறம் அல்ல. அதற்கு மேலே ஒன்றுள்ளது. அதுதான் பரஸ்பர பு‌ரிதல். அந்த நான்கு எழுத்து சிறப்பாக இருந்தால்தான் இல்லறம் என்ற நான்கெழுத்து சிறக்கும் என படம் குறித்து தத்துவமாக விளக்குகிறார் ஏ.கிருஷ்ணா.

நாயகியாக ஸ்வேதா நடித்துள்ளார். அவருடன் ராதா, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். கே.கே.செந்தில்குமார் இசையமைக்க எம்.ஆர்.ஏ.விஜய், குகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியிருக்கும் மீராவுடன் கிருஷ்ணா மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil