குழந்தைகளுக்கு அவ்வப்போது பூச்சித் தொல்லை ஏற்படும். அதாவது, விரல்களை சப்புதல் அதிகமாக இனிப்புப் பொருட்களை சாப்பிடுவது போன்றவற்றால் பூச்சி ஏற்படும்.
வயிற்றில் பூச்சி இருந்தால் குழந்தைக்கு அதிகமாக உணவுப் பொருட்களின் மீது நாட்டம் ஏற்படும். ஆனால் அதிகமாக சாப்பிட முடியாது, உடல் இளைக்கும், மலம் கழிப்பதில் சிக்கல் போன்றவை ஏற்படும்.
எனவே மருத்துவர்களின் ஆலோசனைப் படி குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தப்படுத்தும் மருந்தை அளிக்க வேண்டும்.
இல்லை என்றால், அவை குடல்களில் தங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே பூச்சி மருந்து கொடுப்பது மிகவும் அவசியம்.