குழந்தைகளுக்கு காலையில் இட்லியை உணவாக அளிப்பது நல்ல ஊட்டச்சத்தான உணவுதான். எனவே தினமும் கூட குழந்தைகளுக்கு காலையில் இட்லியை தரலாம்.
இட்லியில் அரிசியும், உளுந்தும் உள்ளன. இட்லியைத் தொட்டுக் கொள்ள கொடுக்கும் சட்னியில் பொரிகடலையும், தேங்காயும் சேர்த்திருப்போம்.
அதே போல சாம்பாரில் பருப்பு, சிலவகை காய்கறிகள் இருக்கும்.
எனவே குழந்தைகளுக்குத் தேவையான மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துகள் ஆகியவை இட்லி + சட்னி + சாம்பார் இணைந்த காலை உணவில் கிடைத்துவிடும்.
எனவே இட்லி ஒரு நல்ல சத்துணவாகக் கருதப்படுகிறது. எனவேதான் முந்தைய காலம் தொட்டே இட்லியை குழந்தைகளுக்கு அளித்து வருகிறோம்.