மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தினால் உடல் பருமன் பிரச்சினை என்பது தற்போது அதிகரித்து வருகிறது.
ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இருக்கும் இந்த உடல் பருமன் பிரச்சினை ஓபிசிடி என்று அழைக்கப்படுகிறது.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களுக்கு உடல் பருமனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு விஞ்ஞானி டாக்டர் இன்னா லாண்டர்ஸ் தலைமையில் நடத்ததப்பட்ட ஆய்வில், உடம்பு குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது வழக்கம்தான். ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன்பே பெண்களின் உடல் எடை அதிகமாக இருந்தால் அது கருவுக்கு ஆபத்தைத் தரும். அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் உடலியல் மாற்றங்கள் கருச்சிதைவுக்கு வழி வகுக்கிறது.
இதை உடல் குண்டான பெண்களின் டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளோம் என்கிறார் மருத்துவர் இன்னா.